வாரண்ட் விமர்சனம்
தந்தையின் கனவை நிறைவேற்ற அரசு வேலைக்கு முயற்சிக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். மாமா காளி வெங்கட் உதவியுடன் போலீஸ் வேலை கிடைக்கிறது. திருச்சி பொன்மலை கோட்டை காவல் நிலையத்தில் காவலராக சேருகிறார். அங்கு கடுமையாக நடந்து கொள்ளும் போலீசாரிடம் அப்பாவியான பிரசாத் பாண்டியராஜ் சிக்கிக்கொண்டு, இறுதியில் லாக்கப் டெத் வழக்கிலும் மாட்டிக் கொள்ள அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதை பரபர திரில்லர் கதையாக சொல்லியுள்ளனர்.
இயக்குனரான பிரசாந்த் பாண்டியராஜ், இதில் ஹீரோவாக களம் இறங்கி தனது எதார்த்த நடிப்பால் கவர்கிறார். ஹீரோயின் நமிர்தா சில காட்சிகள் வந்தாலும் மனதில் பதிக்கிறார். அப்பாவாக வரும் பாலாஜி சக்திவேல், இன்ஸ்பெக்டராக நடித்துள்ள அருள் தாஸ், ஏட்டு ஹலோ கந்தசாமி மற்றும் சாயாதேவி, கௌசல்யா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு சாதாரண மனிதன், அதிகார வர்க்கத்தின் சூழலால் எப்படி மாறுகிறான் என்பதை விறுவிறுப் பான திரைக்கதை உடன் எதார்த்தமாக சொல்லி உள்ளார் இயக்குனர் விக்னேஷ் நடராஜன். சாம் சி எஸ் பின்னணி இசையில் மிரட்டி உள்ளார். அசோக் குமாரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. வாரண்ட் வெப் சீரிஸ் ஜீ5 ஒடிடி தளத்தில் 22ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகி உள்ளது.
Prev Post
Next Post