Take a fresh look at your lifestyle.

துல்கர் ஜோடியான பூஜா ஹெக்டே

93

துல்கர் ஜோடியான பூஜா ஹெக்டே
நடிகர் துல்கர் சல்மான் தற்போது தனது 41 வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். உள்ளார். இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். தயாரிப்பாளர் சுதாகர் செருகூரியின் எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும் காதலும் கலந்த பொழுது போக்கு படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது. படத்திற்கு அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.