Take a fresh look at your lifestyle.

ரீ ரிலீஸ் ஆகும் விக்ரமின் சேது

51

ரீ ரிலீஸ் ஆகும் விக்ரமின் சேது
விக்ரம் நடிப்பில் பாலா இயக்கிய முதல் படம் சேது.இதில் சிவகுமார், அபிதா, ஸ்ரீமன், ஜோதிலட்சுமி, மனோபாலா, மோகன் வைத்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்தார். ஸர்மதா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கந்தசாமி தயாரித்தார். முதலில் வெளியிட்டு ரசிகர்கள் தியேட்டருக்கு வராததால் படம் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டது. பின்னர் மவுத் டாக் மூலம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றது.படம் வெளியாகி வெள்ளி விழா ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது படத்தை அதிநவீன தொழில் நுட்பத்தில் புதுப்பித்து ரீ ரிலீஸ் ஆகிறது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.