பொங்கலை ‘தெறி’க்க விடப் போகும் விஜய்
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் படத்துக்கு இப்போது வரை சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. அந்த குறையை போக்கும் விதத்தில் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மெர்சல் படம் 10ம் தேதி முதல் மீண்டும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை அட்லீ இயக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி தயாரித்திருந்தார். அதேபோல் விஜய்யின் மற்றொரு பிளாக்பஸ்டர் படமான தெறி படம் பொங்கலை ஒட்டி வரும் 15ம் தேதி ரிலீசாக உள்ளது. கலைப்புலி தாணு தயாரித்த இந்த படத்தை அவரே மீண்டும் ரிலீஸ் செய்கிறார்.
Prev Post
Next Post