Take a fresh look at your lifestyle.

தனுஷ் கேரக்டர் பற்றி மனம் திறந்த விக்னேஷ் ராஜா

108

தனுஷ் கேரக்டர் பற்றி மனம் திறந்த விக்னேஷ் ராஜா
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர. மமிதா பைஜு ஹீரோயின் ஆக நடிக்க,முக்கிய கேரக்டரில் நடிகர்கள் சுராஜ்,கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம்,கருணாஸ் ஆகியோர் நடித்துள் ளனர். வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 30 ம் தேதி வெளியாகிறது. இதை ஒட்டி நேற்று மாலை இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியானது. படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் ராஜா கூறியது, 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து கதையை உருவாக்கி உள்ளேன்.இந்த கதையை எழுத 8 மாதங்கள் ஆனது. முதலில் கதையை ப் படித்த தனுஷ், ஹீரோவுக்கு பிளாக் இமேஜ் உள்ளது. அதை கிரே இமேஜாக மாற்ற முடியுமா எனக் கேட்டார். நானும் வொர்க் அவுட் செய்து கதையை மாற்றினேன். படத்தில் தனுஷ் கேரக்டர் ஒரு கிரே ஸ்ஷேடுடன் இருக்கும். சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் ஆக்சன் இருக்கும் என்றார்.