Take a fresh look at your lifestyle.

வெற்றி, தோல்வி என்னை பாதிக்காது: பூஜா ஹெக்டே

2

வெற்றி, தோல்வி என்னை பாதிக்காது: பூஜா ஹெக்டே
தமிழில் முகமூடி, பீஸ்ட், ரெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சமீபத்தில் கூலி படத்தில் அவர் நடனமாடிய ‘மோனிகா’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி பெறாமல் இருப்பதால், அவர் கவலையில் இருந்து வருவதாகவும், இதனால் சூப்பர் உமன் கேரட்டர்களில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள பூஜா ஹெக்டே, “சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது சரிசமம். தானும் ஒரு அப்படித்தான். வெற்றி, தோல்விகளை கடந்துதான் பயணிக்கி றேன். எனவே எதுவும் என் மனநிலையை கவலைப்படுத்திடாது. வழக்கம்போல பிசியாக நடித்துக் கொண்டிருக் கிறேன். மற்றபடி எந்த யூகங்களுக்கும் பதில் சொல்ல விரும்ப வில்லை” என்றார் .