Take a fresh look at your lifestyle.

வெற்றிமாறன் வெளியிட்ட “அண்டர் 18” பட டைட்டில் லுக்

83

வெற்றிமாறன் வெளியிட்ட “அண்டர் 18” பட டைட்டில் லுக்
மெட்ராஸ்காரன் படத்தை தொடர்ந்து, எஸ் ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் பி.ஜெகதீஸ் தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் ஆகியோர் நடிக்கும் உருவாகியுள்ள படம் “அண்டர் 18” . இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கி உள்ளார். இவர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றியவர். இந்த படத்தின் டைட்டில் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்ப டும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமா தான் இந்த படத்தின் கதை. தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வ மான கதையாக இதை இயக்குநர் உருவாக்கி வருகிறார்.