உபேந்திராவின் ‘நெக்ஸ்ட் லெவல்’
ரஜினியின் கூலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ள கன்னட நடிகர்
உபேந்திரா, அடுத்ததாக“நெக்ஸ்ட் லெவல்” என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் அரவிந்த் கௌஷிக் இயக்குகிறார். சுவாரஸ்யமான கதை சொல்லல் மற்றும் அதிநவீன விஷுவல் ஆகியவற்றுடன் இது உருவாகவுள்ளது. இதில் ஆராதனா நாயகியாக நடிக்கிறார். தர்ஷன், கடேரா ஆகியோர் நடிக்கின்றனர்.
தருண் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தருண் சிவப்பா தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா, ஹைதராபாத்தில் நடந்தது. படப்பிடிப்பு, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெறவுள்ளது.
Prev Post
Next Post