Take a fresh look at your lifestyle.

பிரபலங்கள் வெளியிட்ட புல்லட் பட டீஸர்

81

பிரபலங்கள் வெளியிட்ட புல்லட் பட டீஸர்
இன்னாசி பாண்டியன் இயக்கத்தில்,ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடித்துள்ள படம் ‘புல்லட்’ . இதில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு டிஸ்கோ சாந்தி மீண்டும் ரீ-எண்ட்ரி ஆகியிருக்கிறார். அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இதை‌ ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகி உள்ளது.இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. தமிழ் டீசரை விஷால், எஸ் ஜே.சூர்யா, பிருத்விராஜ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வெளியிட்டனர். தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார்.