தக்லைப் படத்தால் அப்செட்டில் திரிஷா
தக் லைப் படம் குறித்து வரும் விமர்சனங்கள், சமூகவலைதளங்களில் பரவும் டிரோல்கள் படக்குழுவை அதிகம் பாதித்து இருக்கிறது. குறிப்பாக, அதில் ஹீரோயினாக நடித்த திரிஷாவை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளதாம். மணிரத்னம் இயக்கத்தில் நான் நடித்த பொன்னியின் செல்வனை கொண்டாடினார்கள். குந்தவை என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான பாத்திரமாக அமைந்தது. ஆனால், தக் லைப் இந்திராணி கேரக்டரை திட்டி தீர்க்கிறார்கள். ஒரு சிலர் கமல், சிம்பு கேரக்டருக்கு இடையேயான அந்த கேரக்டரின் காதல் காரணமாக ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்கள். சில மலையாள பிட் படங்களுடன் ஒப்பிடுகிறார்கள் என வருத்தமாக கூறியுள்ளார்.
Prev Post
Next Post