Take a fresh look at your lifestyle.

கருப்பு நிலாவாக திரிஷா

178

கருப்பு நிலாவாக திரிஷா
தென்னிந்திய சினிமாவில் 42 வயதிலும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் அவரும் ஒருவர். சமீபத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படம் அவர் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது. அதோடு அவரது கேரக்டர் பற்றியும் கடுமையாக விமர்சனங்கள் கூறப்பட்டது. இதனால் மன உளைச்சல் இருந்த திரிஷா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். அந்த மகிழ்ச்சியில் கருப்பு நிற சேலையில் அழகான போட்டோ சூட் நடத்தி அந்த ஸ்டில் களை இன்ஸ்ட்டாவில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.