ட்ரெண்டிங் ஆன ஜெயிலர் 2 பட பாடல்
நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள’ ஜெயிலர் 2 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 15ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் அதன் முதல் பாடலான அல போலேலோ பாடல் நேற்று முன்தினம் மாலை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.அருண்ராஜா காமராஜ் எழுதி யுள்ள இப்பாடலை அனிருத் ரவிச்சந்தர், தீப்தி சுரேஷ், அபர்ணா ஹரிகுமார், நிரஞ்சனா ராமன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலுக்கு நடிகை பூர்ணா டான்ஸ் ஆடி உள்ளார் தற்போது இந்த பாடல் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் தமன்னா பாடல் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
Prev Post
Next Post
