ராம் அண்ட் லீலா விமர்சனம்
திருமணத்திற்காக பல பெண்களை பார்த்து வெறுத்துப்போன ரியோ ராஜ், ஒரு நாள் மின்சார ரயிலில் வர்த்திகாவை சந்திக்க, முதல் பார்வையிலேயே உருவாகும் ஈர்ப்பு காதலாக மாறுகிறது. அந்த காதல் கைகூடும் நேரத்தில், மாலை 6 மணிக்கு மேல் என்னை பார்க்கக் கூடாது என கண்டிஷன் போட, அதற்கு ஓகே சொல்லி காதலிக்க தொடங்குகிறார் ரியோ. ஆனால் மாலை 6 மணிக்கு மேல் வர்த்திகா ஏன் சந்திக்க மறுக்கிறார் என்பது தான் படத்தின் சுவாரசியமான மீதி கதை. காதல், காமெடி கலந்து ஒரு பேண்டசி படமாக இயக்கியுள்ளார் ராமச்சந்திரன் கண்ணன்.
இருப்பினும் இதே போன்ற கதையை சமீபத்தில் பார்த்து ரசித்ததால் சற்று சுவாரசியம் குறைவாக உள்ளது. ரியோ ராஜ் தனது வழக்கமான எதார்த்த நடிப்பால் கவர்கிறார். வர்த்திகா, சேட்டு விட்டு லட்டு போல் இருகிறார். சேத்தன், மாளவிகா, அவினாஷ், தீபா வெங்கட், காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் தங்கள் அனுபவமான நடிப்பால் கதைக்கு வலு சேர்க்கின்றனர். முனீஷ்காந்த்,மா.கா.பா. ஆனந்த் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. மல்லிகார்ஜுனின் ஒளிப்பதிவு, அங்கித் மேனனின் இசை ஓகே ரகம்.

