Take a fresh look at your lifestyle.

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் டூயட் சாங்

126

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் டூயட் சாங்
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடலான ‘காட்டு செண்பகம்’ எனும் பாடலின் தமிழ் பதிப்பு வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப் பாடல் ஏற்கனவே இசை ஆர்வலர்களிடை யே கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலின் தமிழ் பதிப்பின் வரிகளை மோகன் ராஜா எழுதி யுள்ளார். இந்த பாடலை அகில் ஜே சந்த் மற்றும் ஆவணி மல்ஹார் பாடியுள்ளனர். இந்த படத்தில் தென்னிந்திய திரைப்படத் துறையை சார்ந்த பல முக்கிய நடிகர்களும் இடம் பெற்றுள்ளனர். மலையாள பதிப்பிற்கு கிடைத்த வலுவான வரவேற்பை தொடர்ந்து தமிழ் பதிப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் டொவினோ தாமசுடன், கயாடு லோஹரும் இணைந்து நடித்துள்ளார்.