Take a fresh look at your lifestyle.

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்

465

முதலிடத்தில் விஜய், 2-வது இடத்தில் ரஜினி

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்

சென்னை: ஜனவரி 1,
தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரங்களின் சம்பளம் கோடிகளில் பொருளை தொடங்கிவிட்டது. ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக நடிகர் விஜய் 250 கோடி ரூபாயும், நடிகர் ரஜினி 225 கோடியும் வாங்கி முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் ரூபாய் 180 கோடி வாங்கி மூன்றாவது இடத்தில் உள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் டாப் 10 நடிகர்கள் வாங்கிய சம்பளங்களின் உத்தேச பட்டியல் இதோ:-

விஜய் : இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஒரு படத்திற்கு சுமார் ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். குறிப்பாக தனது 69-வது படத்திற்காக சுமார் 250 கோடி ரூபாய் சம்பளம் பெற்று, நடிகர் விஜய் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடம் பிடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் : இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் ரஜினிகாந்த் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு சுமார் ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை சம்பளம் பெறுகிறார். ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இவரது மார்க்கெட் வேல்யூ குறையாமல் இருந்து வருகிறது.

அஜித் குமார் : மூன்றாவது இடத்தில் இருக்கும் அஜித் குமார், ஒரு படத்திற்கு ரூ.120 கோடி முதல் ரூ.180 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

கமல்ஹாசன்: ‘விக்ரம்’ படத்தின் மெகா ஹிட்டிற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது இவர் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை சார்ஜ் செய்கிறார்.

சூர்யா : நடிகர் சூர்யா ஒரு படத்திற்கு ரூ.50 கோடி முதல் 70 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
தனுஷ் : பல மொழிகளில் நடித்து வரும் நடிகர் தனுஷ், தற்போது ஒரு படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் : மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், இந்த பட்டியலில் தற்போது டாப் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது சம்பளம் ரூ.40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை இருக்கும்.
விஜய் சேதுபதி : வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, சோலோ ஹீரோவாக ஒரு படத்திற்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
கார்த்தி : தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நடிகரான கார்த்தி, ஒரு படத்திற்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.
சிலம்பரசன் : ‘மாநாடு’ வெற்றிக்கு பிறகு இவரது சம்பளம் உயர்ந்து தற்போது 18 கோடி முதல் 25 கோடி வரை உள்ளது.
இந்த பட்டியலில் 11-வது இடத்தில் இருக்கும் நடிகர் பிரதீப் ரங்கநாதன், ஒரு படத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். மிகக் குறுகிய காலத்தில் இந்த இடத்தை இவர் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-கே விஜய் ஆனந்த்