இன்றைய தலைப்புச் செய்திகள்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல். தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என பெரும் எதிர்பார்ப்பு.
தமிழ்நாடு 16 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டி சாதனை என பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல். வளர்ச்சி விகிதத்தை தக்க வைத்தால், 2031-ல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையலாம் என கணிப்பு
கூட்டணி தொடர்பான காங்கிரஸ் நிர்வாகிகளின் சர்ச்சை பேச்சு குறித்து கார்கேவிடம், செல்வப்பெருந்தகை புகார். அனைத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்று கார்கே உறுதி அளித்ததாக செய்தியாளர்களிடம் தகவல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு. பிரதமர் மோடி வரும் 1-ம் தேதி மதுரை வருவதால், கூட்டணியை இறுதி வடிவத்திற்கு கொண்டுவருவது பற்றி ஆலோசனை.
திரிஷாவின் கடும் கண்டனத்தை தொடர்ந்து, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன். விஜயை அவதூறாகப் பேசியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க. சார்பில் புகார்.
சபரிமலையில் பெண்களை வழிபட அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனு. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஏப்ரல் 7 முதல் 22-க்குள் விசாரணை முடியும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இஸ்ரேல் வர உள்ளதாக, அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு. வரும் 25, 26 தேதிகளில் மோடி பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்.