Take a fresh look at your lifestyle.

இவர்தான் அடுத்த ஊர்வசி:இயக்குனர் ராம்

83

இவர்தான் அடுத்த ஊர்வசி:இயக்குனர் ராம்
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்
‘பறந்து போ’. இதில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன், ரியான், அஞ்சலி, அஜு
வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோர்
நடித்துள்ளனர். வரும் ஜூலை 4-ந் தேதி படம் வெளியாகிறது. இதை முன்னிட்டு நடந்த
புரொமோஷன் விழாவில் இயக்குனர் ராம்
பேசியது, இந்தப் படத்துக்கு ஹீரோயின் பற்றி சொன்னவுடன் நடிகர் நிவின்பாலி எனக்கு மலையாள நடிகை கிரேஸ்
ஆண்டனியை ரெக்கமண்ட் செய்தார். அவர் இதில் நடிக்க தொடங்கியதும் நான் ஆச்சரியமானேன். அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அடுத்த ஊர்வசி. அந்த அளவுக்கு தனது கேரக்டரை எலிவேட் செய்து நடிக்கும் திறமையான நடிகை. நிமிஷா சஜயன், சாய் பல்லவி போல் கிரேஸ் ஆண்டனியும் இங்கு பெரிய இடத்துக்கு வருவார் என்றார்.