கைதி-2 வில் நடிக்கும் அனுஷ்கா?
ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்ததும் கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை தொடங்கப் போகிறார் லோகேஷ். அந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த டில்லி கேரக்டரை மீண்டும் கார்த்தி தொடருவதால், ஏற்கனவே அவர் இயக்கிய விக்ரம் படத்தின் மூன்று கேரக்டர்களை இதில் இணைக்க திட்டமிட்டுள்ளார். அந்த வகையில், கமல் நடித்த விக்ரம், விஜய் சேதுபதி நடித்த சந்தானம், சூர்யா நடித்த ரோலக்ஸ் ஆகிய மூன்று கேரக்டர்களும் இதில் இடம் பெறச்செய்கிறார். அதேப்போல் இந்த படத்தில் அனுஷ்காவும் ஒரு லேடி டான் கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Prev Post
Next Post

