Take a fresh look at your lifestyle.

‘ ரீனா’வான ‘தேன் மிட்டாய்’ டாக்டர்

85

‘ ரீனா’வான ‘தேன் மிட்டாய்’ டாக்டர்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் தீபா பாலு. டாக்டருக்கு படித்துள்ள இவருக்கு நடிப்பு மீது ஆர்வம் அதிகம். இதனால் டாக்டர் வேலையை செய்து கொண்டே யு டியூப்களில் சில குறும்படங்களில் நடித்தார். அதில் அவர் நடித்த ‘தேன் மிட்டாய்’ என்ற தொடர் பரவலான பாராட்டை பெற்றது.தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ‘ஹார்ட் பீட்’ தொடரில் டாக்டராகவே நடிக்கிறார். அவரது கதாபாத்திரமான ‘ரீனா’ பாப்புலராகி உள்ளது. அடுத்து சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார். ரேவதி, நதியா, ஜோதிகா மற்றும் சாய்பல்லவி ஆகியோர் வழியில் நானும் தரமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க இருப்பதாக சொல்கிறார் தேனப்பன் டாக்டர் தீபா.