Take a fresh look at your lifestyle.

விஜயகாந்த் வழியில் சண்முகபாண்டியன் (அ) கொம்பு சீவி ஷூட்டிங் முடிந்தது

82

விஜயகாந்த் வழியில் சண்முகபாண்டியன் (அ) கொம்பு சீவி ஷூட்டிங் முடிந்தது

பொன்ராம் இயக்கும் ‘கொம்புசீவி’ படத்தில் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார். ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மறைந்த நடிகர் விஜயகாந்த் தனது படத்தில் ஷூட்டிங் நிறைவு நாளில் அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்குவதுடன் புத்தாடைகளும் கொடுத்து மகிழ்வார். அந்த வகையில் கொம்பு சீவி படத்தில் ஷூட்டிங் தேனியில் தொடங்கி சென்னையில் நிறைவுற்றது.இதை ஒட்டி படக்குழுவினருக்கு பிரியாணி மற்றும் புத்தாடைகளை நடிகர் சண்முக பாண்டியன் வழங்கினார்.