Take a fresh look at your lifestyle.

ஆளே மாறிப்போன லோகேஷ்

84

ஆளே மாறிப்போன லோகேஷ்
விஜய் நடித்த லியோ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் கூலி படத்தை இயக்கத் தொடங்கினார் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தில் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கின. வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டதால் அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் இரவு பகலாக வேலை செய்து வருகிறாராம்.இதனால் தனது தலை முடியை கூட வெட்ட நேரமில்லாமல் இருக்கிறார் லோகேஷ். எந்திரன் படத்தில் ரோபோ கண்டுபிடிப்பில் ஈடுபட்ட வசீகரன் போன்று லோகேஷ் இருப்பதாக இணையத்தில் கமெண்டுகள் பதிவிடப்படுகிறது.