Take a fresh look at your lifestyle.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே அடுத்த போர் நிகழ வாய்ப்புகள் தெரிகின்றன இதற்கு ஒரே காரணம் அந்த டிரம்பர்

78

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே அடுத்த போர் நிகழ வாய்ப்புகள் தெரிகின்றன இதற்கு ஒரே காரணம் அந்த டிரம்பர்

டிரம்பர் மறுபடியும் பாகிஸ்தானிய தளபதியும் இந்தியா மேல் கடும் வெறுப்பு கொண்டவனுமான ஆசிம் முனீரை இரண்டாம் முறை அமெரிக்காவுக்கு அழைக்கின்றார், இது பலத்த கேள்விகளை உலகில் எழுப்பியுள்ளது

காரணம் இது அமெரிக்க நடைமுறைக்கு எதிரானது, அமெரிக்கா ஜனநாயக நாடு எனும் வகையில் பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதமரைத்தான் அழைக்கவேண்டும் ஆனால் டிரம்பரோ இந்தியாவோடு போரை நிறுத்த உதவியர் இவர் என முதலில் அழைத்தார், பின் மீண்டும் அழைக்கின்றார்

இதன் உள்நோக்கம் சரியில்லாதது, ஏற்கனவே பாகிஸ்தான் இந்தியா உடைத்துபோட்ட தீவிரவாத முகாம்களை மீளமைக்கின்றது அதனை பாகிஸ்தான் ராணுவமுகாம் அருகே அமைக்கின்றது, இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதியினை டிரம்பர் அழைப்பது பெரும் கவனம் பெறுகின்றது

டிரம்பருக்கு இரு திட்டம் இருக்கலாம் முதலில் தனக்கு ஒத்துழைக்காத இந்தியா ஒடுக்கபட வேண்டும் குறிப்பாக கடந்த மேமாதம் பெரும் சாதனைகளை செய்து உலக அரங்கில் பெரும் இடம்பெற்ற இந்திய ஆயுத தயாரிப்புகள் பலமில்லாதவை என காட்டி ஆயுத சந்தையில் இருந்து அவற்றை அகற்ற வேண்டும், இந்திய எஸ் 400, ஆகாஷ் மிரம்மோஸ் எல்லாம் பலவீனமானவை என்பதை நிருபிக்க வேண்டும் இந்தியா ஆயுத ஏற்றுமதி என வரவே கூடாது எனும் தீய எண்ணம் இருக்கலாம்

இரண்டாவது இன்னுமோர் போரை தொடங்க வைத்து இவர் உள்ளே புகுந்து “நான் இரண்டாம் முறையாக போரை நிறுத்தினேன்” என ஊளையிடலாம்

எப்படியோ ஒரு போர் தொடங்க வாய்ப்பு உண்டு, அதற்கு வலுசேர்ப்பது போல் காஷ்மீர் போராட்டத்துக்கு நாம் உதவுவோம் அது நம் கழுத்து நரம்பு என பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றான் அந்த முனீர்

அப்படியே இம்முறை போர் கிழக்கு எல்லையில் தொடங்கும் என வங்க எல்லை அசாம் எல்லையினை கோடிட்டு காட்டுகின்றான்

இந்தியா நடப்பதை கவனமாக அவதானிக்கின்றது, பாகிஸ்தான் எந்த உருவில் வாலாட்டினாலும் பதிலடி கொடுப்போம் என தேசம் தயாராகின்றது

டிரம்பர் என்பவர் மனதில் ஏதோ சைத்தான் புகுந்துவிட்டது இனி அது அமெரிக்காவினை நாசமாக்காமல் விடாது, பாகிஸ்தானை மீண்டும் ராணுவ ஆட்சிக்கு கொண்டுவந்து இந்தியாவினை சீண்ட டிரமப்ர் திட்டமிடுகின்றார் இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் பெரும் சரிவினை இனி கொண்டுவரும்

2000ம் ஆண்டுகளில் இப்படித்தான் வாஜ்பாய் அரசு இருந்தபோது அவர் வலுவான இந்தியாவினை உருவாக்கியபோது இந்தியாவினை சீண்ட பாகிஸ்தானை கொஞ்சி கொண்டிருந்தது அமெரிக்கா, அப்போதுதான் பின்லேடன் கோஷ்டி அமெரிக்காவில் அந்த அவமானத்தை கொடுத்தது

மீணடும் அப்படி ஒரு பெரும் அவமானத்தை அல்லது சரிவை காண டிரம்பர் தயாராகின்றார், அவர் விதி அது என்றால் யார் என்ன செய்யமுடியும்?

இந்தியா எதுவந்தாலும் சந்திக்க தயாராக இருக்கின்றது
டிரம்ப் என்பவர் பல குட்டி சாத்தான்களோடு India உடைக்க அந்த துஷ்டன் டிரம்பரின் எல்லா முயற்சியும் தோற்று நாசமாகட்டும்