விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி நடித்துள்ள “காந்தி டாக்ஸ்” டீசர் ரிலீஸ்
அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம், உணர்வு மற்றும் தாக்கம் கொண்ட காட்சிகள் மூலம் பார்வையாளரை கட்டிப் போடும், ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த டீசர் உருவாகியுள்ளது.வார்த்தைகள் இல்லாத போதிலும், இந்த டீசர் நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது.விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் வார்த்தைகள் இன்றியே உணர்ச்சிகளை வெளிப்படுத்தி தங்கள் திறமையை டீசரில் நிரூபித்துள்ளனர்.கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமை த்துள்ளார். வரும் 30 அன்று “காந்தி டாக்ஸ்” படம் ரிலீஸ் ஆகிறது.
Next Post