Take a fresh look at your lifestyle.

சாய் பல்லவியின் பாலிவுட் என்ட்ரி படம்

132

சாய் பல்லவியின் பாலிவுட் என்ட்ரி படம்
பிரேமம்’ மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார். ஆமீர்கான் தயாரிப்பில் அவரது மகன் ஜுனைத் கான் நடிப்பில் சுனில் பாண்டே இயக்கியுள்ள `ஏக் தின்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. இப்படம் பாலிவுட்டில் அவரது அறிமுகப்படமாக அமைந்துள்ளது.இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. படம் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.மேலும் ராமாயணா என்ற பிரம்மாண்ட படத்தில் சீதையாகவும் நடித்து வருகிறார்.