Take a fresh look at your lifestyle.

ட்ரெண்டிங்கில் விஜய் நடித்த “உன்னை நினைத்து” பாடல்

189

ட்ரெண்டிங்கில் விஜய் நடித்த “உன்னை நினைத்து” பாடல்
விக்ரமன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘உன்னை நினைத்து’.படத்தில் முதலில் ஹீரோவாக நடித்தது விஜய் தான். இந்நிலையில் இயக்குனர் விக்ரமன் தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த பாடல் காட்சியை பகிர்ந்துள்ளார். அதில் லைலா உடன் விஜய் பாடும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. விக்ரமன் பதிவில், விஜய், சூர்யா இருவருமே சிறந்த நடிகர்கள் என்பதால் இதை ஒப்பீடு செய்ய வேண்டாம். உன்னை நினைத்து படத்தில் இடம்பெற்ற என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா.. என்ற பாடல் இலங்கையில் சிங்கள மாணவர் களால் பாடப்பட்டு சமீபத்தில் வைரலானது. அந்த பாடலை முதலில் விஜய்யை வைத்து தான் படமாக்கினேன் அந்தப் படத்தின் பழைய வீடியோ கேசட் ஒன்று கிடைத்தது. மிகவும் சேதமாகி இருந்த அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு பகிர்ந்துள்ளேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.