சாம் சிஎஸ் இசையில் “லவ் யூ லவ் யூ காட்டேரி…” பாடல்
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது ஏகே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி வரும் ‘இம்மார்டல்’ படத்திற்கு இசையமைத்துள் ளார்.இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக “லவ் யூ லவ் யூ காட்டேரி” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இந்தப் பாடலை சாம் சி எஸ் மற்றும் ரேஷ்மா ஷாம் இணைந்து பாடியுள்ளனர்.பேண்டஸி திரில்லர் ஜானரில் இப்படம் உருவாகி வருகிறது.
Prev Post
Next Post
