Take a fresh look at your lifestyle.

பிரபல நடிகருடன் பாக்கியஸ்ரீ போஸ் காதல்?

76

பிரபல நடிகருடன் பாக்கியஸ்ரீ போஸ் காதல்?
துல்கர் சல்மானுடன் காந்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் தாய்க்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேயோன் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதிநேனியை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவர் இதுவரை மறுப்பு தெரிவித்து எந்த கருத்தையும் கூறவில்லை. இதனால் அந்த தகவல் உண்மையாக இருக்குமோ என அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.