Take a fresh look at your lifestyle.

அபிநட்சத்திரா நடிக்கும் ஆட்டி

63

அபிநட்சத்திரா நடிக்கும் ஆட்டி
பாமசிவன்-பாத்திமா படத்தை தொடர்ந்து இயக்குனர் இசக்கி கார்வண்ணன் “ஆட்டி” என்ற புதிய படத்தை தயாரித்து, கதையின் நாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக அபிநட்சத்திரா நடித்துள்ளார். இப்படத்தை மேதகு படத்தை இயக்கிய கிட்டு இயக்கி உள்ளார். பெண்களுக்கு எதிராக நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இதில் இசக்கி கார்வண்ணன் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு தீசன் இசை அமைத்துள்ளார்.