Take a fresh look at your lifestyle.

2047-ல் நடக்க போவதை சொல்லும் ரெட்பிளவர் படம்

89

2047-ல் நடக்க போவதை சொல்லும் ரெட்பிளவர் படம்
ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில்
உருவாகி உள்ள படம் ரெட்பிளவர். இதில்
விக்னேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் மனிஷா ஜஷ்னானி, நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி.
மகேந்திரன், லீலா சாம்சன், நிழல்கள் ரவி
உள்பட பலர் நடித்து உள்ளனர். ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படம் 2047-ல் உலகத்தில் என்ன நடக்க போகிறது என்பதை பற்றி பேசுகிறது. ஆகஸ்ட் 8-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக விஷால், இயக்குனர்கள் பி.வாசு, சுராஜ் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.