Take a fresh look at your lifestyle.

படம் இயக்க 30 வருடமாக செருப்பு அணியாத இயக்குனர்

104

படம் இயக்க 30 வருடமாக செருப்பு அணியாத இயக்குனர்
நாகரத்னம் தயாரித்து ஹீரோவாக
நடித்துள்ள படம் வள்ளிமலை வேலன். இந்தப் படத்தை மோகன் இயக்கியுள்ளார்.
இவர் சினிமாவில் இயக்குனராக ஆனால் தான் செருப்பு அணிவேன் என்ற லட்சியத்தில் கடந்த 30 ஆண்டுகளாக செருப்பு அணியாமல் இருந்துள்ளார்.இந்நிலையில் படத்தின் ஆடியோ மற்றும்
டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்நடந்தது.விழாவில்டைரக்டர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், வி.சேகர், மங்கை அரிராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய ஆர் வி உதயகுமார், இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்ற பிறகு நீங்கள் செருப்பு அணிந்தால் அது உண்மையான தவ வெற்றியாக இருக்கும் என்றார்.