Take a fresh look at your lifestyle.

தி ராஜா சாப் படம் பாட்டி- பேரன் கதை: பிரபாஸ்

183

தி ராஜா சாப் படம் பாட்டி- பேரன் கதை: பிரபாஸ்
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார், சஞ்சய் தத், பூமன் இரானி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தி ராஜா சாப். படத்துக்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய,தமன் இசையமைத்துள்ளார்.டி.ஜி. விஷ்வ பிரசாத், கிருத்தி பிரசாத் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் பிரபாஸ் பேசியது, இந்த படம் ஒரு பாட்டி- பேரன் கதையாகும். இதில் ஜரீனா வாஹப் என் பாட்டியாக நடித்திருக்கிறார். அவர் டப்பிங் பேசும் போது, என் காட்சிகளை மறந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அருமையாக நடித்துள்ளார்.சஞ்சய் தத் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் நிதி ரித்தி,மாளவிகா ஆகிய மூன்று நடிகைகளும் அழகாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு .இப்படிப்பட்ட ஹாரர், காமெடி படத்திற்கு தமன் இசை சரியான தேர்வு. இயக்குனர் மாருதியும் சூப்பராக படத்தை எடுத்துள்ளார் என்றார்.