Take a fresh look at your lifestyle.

ரஜினிக்காக ஒரு காதல் கதையை தயார் செய்துள்ள சுதா கொங்குரா

156

ரஜினிக்காக ஒரு காதல் கதையை தயார் செய்துள்ள சுதா கொங்குரா
இறுதிச்சுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் பதித்தவர் சுதா கொங்குரா. இந்த படத்தில் மாதவன் நடித்திருந்தார். அதன் பிறகு சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற படத்தை இயக்கினார் இந்த படமும் வரவேற்பை பெற்றதுடன் தேசிய விருதுகளையும் குவித்தது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் சுதா கொங்கரா அளித்துள்ள ஒரு பேட்டியில், தெலுங்கில் ஒரு நாவல் படித்தேன்.அது முழுக்க, முழுக்க காதல் கதை தான்.ஒரு பெரிய ஹீரோ அதில் அடித்தால் சூப்பராக இருக்கும்.அது வேறு யாருமில்லை ரஜினிகாந்த் தான்.அவரை வைத்து முதல் மரியாதை ஸ்டைலில் ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்கான கதை என்னிடம் இருக்கிறது.அதே நேரம் நான் சோர்வடைந்து விட்டேன், விரைவில் ஓய்வு பெற வேண்டுமென நினைக்கிறேன் என்றார்.