Take a fresh look at your lifestyle.

மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ் படம் ஜூன் 5ல் வெளியாகிறது

62

மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ் படம் ஜூன் 5ல் வெளியாகிறது
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் இணைந்து ‘மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ்’ திரைப்படத்தின் முதல் டிரெய்லரை வெளியிட்டுள்ளன. டிராவிஸ் நைட் இயக்கியுள்ள இப்படம் அதிரடி அறிவியல் புனைவு கதையாக சாகசங்கள் நிறைந்துள்ளது.நிக்கோலஸ் காலிட்சைன், கமிலா மெண்டிஸ், அலிசன் ப்ரீ, ஜேம்ஸ் பியூர்ஃபாய், மொரீனா பக்கரின், ஜோஹன்னஸ் ஹௌகூர் ஜோஹன்னெசன், சார்லட் ரைலி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 5,அன்று ஐ மேக்ஸ் மற்றும் பிற பிரீமியம் வடிவங்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.