2 வாரத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ்
ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா கூறியது, முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் பெறுவதற்கு சென்சார் போர்டில் பேசி வருகிறோம். படம் இன்னும் 14 நாட்களில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.எனக்கு முதல் அமைச்சர் விஜய்யை தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் மிகவும் ஒழுக்கமானவர் அர்ப்பணிப்பு உள்ளவர்.சொன்னதை செய்பவர். அவரது தலைமையில் தமிழகத்தில் மலரும் புதிய சகாப்தத்துடன் படத்தின் தலைப்பும் கருப்பொருட்களும் ஒத்துப் போகிறது.ஒரு புதிய தலைமை ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது. தமிழக மக்களுக்கு ஜனநாயகனாக அவர் உருவெடுத்துள்ளார் என்றார்.
Prev Post
