மீனா, மோகன்லால் காம்போ தொடரும்!!
மோகன்லால்-மீனா நடிப்பில் வரும் 21-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் திரிஷ்யம் 3. ஜித்து ஜோசப் இயக்கியுள்ள படத்தில் மீனா, எஸ்தர் அனில் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.விழாவில் மோகன்லால் கூறியது, படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து படத்தில் மேலும் பல பாகங்கள் வரலாம். ஜார்ஜ் குட்டியின் கதை இப்போதைக்கு முடிவடையாது. இந்த கதை இன்னும் வளர இடம் இருக்கிறது. படத்தின் நான்காம் பாகத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். நான்காம் பாகம் தொடங்குவதற்கு முன்பே ஐந்தாம் பாகம் குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
Prev Post
Next Post