Take a fresh look at your lifestyle.

இந்த கதையை இயக்குனர் சொன்னவுடன் என் குலை நடுங்கி விட்டது: ஐஸ்வர்யா ராஜேஷ் 

178

இந்த கதையை இயக்குனர் சொன்னவுடன் என் குலை நடுங்கி விட்டது: ஐஸ்வர்யா ராஜேஷ்

அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தீயவர் குலை நடுங்க.இதில் அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர். மேலும் பிரவீன் ராஜா, அபிராமி, தங்கதுரை,லோகு, குழந்தை நட்சத்திரம் அனிகா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 21-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.இந்த நிலையில் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது.இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில்,இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. தீயவர் குலை நடுங்க, படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னதும் எனக்கு உண்மையாகவே நடுங்கி விட்டது. ஜென்டில் மேனில் இருந்தே அர்ஜூனை பார்த்திருக்கி றோம். உண்மையில் அவர் அர்ஜூன் ஜென்டில்மேல் தான் என்றார்.