கத்ரீனாவுக்கு கிடைத்த கௌரவம்
உலகின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாலத்தீவு விளங்குகிறது. அங்கு பிரபலங்கள் விரும்பி சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்திய திரை உலகில் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் கத்ரீனா கைப், அதன் சுற்றுலா தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாலத்தீவுக்கு அடுத்த மாதம் பிரதமர் மோடி செல்ல உள்ள நிலையில் கதிரீனாவுக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

