காதல் கணவருக்கு ரஷ்மிகா தந்த பரிசு
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.திருமணம் முடிந்து முதல் பிறந்தநாள் என்பதால், தனது காதல் கணவருக்கு ராஷ்மிகா வாழ்த்து தெரிவித்து, அன்பு பரிசை வழங்கினார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதோடு விஜய் தேவரகொண்டா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு நடிக்கும் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் ரணபாலி படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஒன்றையும் பட குழு வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, ராகுல் இயக்கியுள்ளார்.
Prev Post
Next Post
