50 நாட்களைக் கடந்த துரந்தர் 2
ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த துரந்தர்2 படம் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. திரையரங்குகளில் 5 வார இறுதியிலும் இப்படம் இந்தியாவில் ரூ.1,153 கோடி மற்றும் உலகளவில் ரூ.1,783 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தற்போது இப்படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு இரண்டு ஓடிடி தளங்களிலும் இப்படம் வெளியாகியுள்ளது.
Prev Post
Next Post