மீண்டும் ஒலிக்கும் சின்மயி குரல்
தமிழ் சினிமாவில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் பாடகையாக அறிமுகமானவர் சின்மயி. பல ஹிட் பாடல்களை பாடியுள்ள கடந்த 2018ம் ஆண்டு முதல் பாட தடை விதிக்கப்பட்டது. இதனால் தெலுங்கு இந்தியில் பாடல்களை பாடி வந்தார். இந்த நிலையில் ‘தக்லைப்’ பட இசை வெளியீட்டு விழாவில் அவர் பாடிய முத்த மழை பாடல் வைரலானது. இதனை தொடர்ந்து கே.எஸ்.அதியமான் இயக்கி வரும் புதிய படத்தில் சின்மயி பாடுவதற்கு இசை அமைப்பாளர் டி.இமான் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
Prev Post
Next Post