Take a fresh look at your lifestyle.

மாயபிம்பம் இயக்குனரின் அடுத்த படம்

105

மாயபிம்பம் இயக்குனரின் அடுத்த படம்
முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து மாயபிம்பம் என்ற படத்தை இயக்கி, தயாரித்து,வெளியிட்டவர் கே.ஜே.சுரேந்தர். 2005ம் ஆண்டில் நடந்த காதல் கதையாக உருவான இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. அறிமுக இயக்குனராக வந்து முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சுரேந்தர். இந்த நிலையில் மாய பிம்பம் படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ,உடனடியாக சுரேந்தரை வரவழைத்து பாராட்டியதுடன்,அவர் தயாரிக்க உள்ள புதிய படம் ஒன்றை இயக்கவும் வாய்ப்பு வழங்கி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.