அயோத்தி பட இயக்குனரின் ஆதங்கம்
மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த அயோத்தி படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து கவிஞர் வைரமுத்து உள்பட பலர் சமூக வலைதளத்தில் கருத்துக் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து படத்தின் இயக்குனர் மந்தி ரமூர்த்தி கூறியது,
அயோத்தி படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்று பல பேர் பதிவிட்டது எனக்கு மன நிறைவை தந்துள்ளது. ஒரு திரைப்படத்தின் தரம் மற்றும் அதன் தாக்கம் விருதுகள் கிடைப்பைத மட்டும் சார்ந்தது இல்லை
அது மக்களால் எப்படி உணரப்படுகிறது என்பது தான் முக்கியம் .பார்க்கிங் படம் மூன்று தேசிய விருதுகைள வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
Prev Post
Next Post
