ஜி.டி.என்.பற்றி இன்னும் நிறைய பேருக்கு தெரியாதது வருத்தம்: மாதவன்
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜிடிஎன்’ படத்தில் மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன், கருணாகரன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் நாளை 7 ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் மாதவன் பேசியது, ஜி.டி. நாயுடு திரைப்படத்திற்கு முன்பே குரு, ராக்கெட்டரி என சில உண்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.நான் இன்ஜினியரிங் படிக்கவில்லை. ஆனால் அதன் மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஜி.டி. நாயுடு பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. அதுவே மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவரைப் பற்றி மாணவர்களுக்கு ஒரு சாப்டர் இருக்க வேண்டும் என்ற போராட்டம் தான் படத்தில் அதிதியின் கதாபாத்திரம். இவ்வளவு பெரிய மேதை பற்றி ஏன் நிறைய பேருக்கு தெரியவில்லை. இன்றைக்கு நடக்கும் பல விஷயங்களை அன்றே அவர் செய்து விட்டார் என்றார்.