‘தி டார்க் ஹெவன்’ படம் வரும் 17ல் ரிலீஸ்
கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ் .ஸ்விஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன் ‘. ‘5 கொலைகள் ஒரே விதத்தில் நடக்கிறது. ஆனால் எந்தத் தடயமுமில்லை’ என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட் டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது . அறிமுக நடிகர் சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார். இப்படம் 17ல் தமிழ், ஆங்கிலம் , தெலுங்கு , ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
Prev Post