‘ மண்டாடி’ படத்தில் சூரி போட்ட ஆட்டம் செம வைரல்
சூரி நடிப்பில் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள படம் “மண்டாடி”. பாரம்பரிய மீனவர்களின் படகுப் போட்டி கலாச்சாரத்தை பின்னணியாகக் கொண்டு பிரம்மாண்ட ஆக்ஷன் கதையாக உருவாகியு ள்ள இப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் பட புரோமோ பாடலில் சூரியின் நடனம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாடலில் சூரியின் வெறித்தனமான நடனத்தால் அந்தப் பாடல் இணையத்தைக் தெறிக்கவிட்டுள்ளது. இதுவரை75 மில்லியனுக்கும் அதிகமான சோஷியல் மீடியா பார்வைகள் மற்றும் யூடியூபில் 10 மில்லியனைக் கடந்து சாதனை படித்து வருகிறது. ஆர்.எஸ். இன்ஃபோடைன் மென்ட் தயாரிப்பில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.