செப்டம்பர் 25ல் ‘மீசைய முறுக்கு 2’ ரிலீஸ்
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை, காதல், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு படமாக தயாராகி உள்ள இப்படம் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது. அதோடு, 2017-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘மீசைய முறுக்கு’ படத்தின் 9வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியானது. நடிகராகவும் இயக்குநராகவும் ஹிப்ஹாப் தமிழா ஆதியை அறிமுகப்படுத்திய அந்த படம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பெற்றதுடன், வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
Next Post