Take a fresh look at your lifestyle.

வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களின் செயல்பாட்டினை சரிபார்த்தல் பணி

1

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களின் செயல்பாட்டினை சரிபார்த்தல் பணி (EVM Checking & Verification process) 29.07.2026 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது நாளாக இன்று (31.07.2026) இரண்டு வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டினை சரிபார்க்கும் பணியானது (EVM Checking & Verification process), சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் வேட்பாளரின் முகவர் முன்னிலையில் சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கு அறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி எஸ்.சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) திருமதி நா.பூஷ்ணாதேவி மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.