Take a fresh look at your lifestyle.

2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு

112

2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மொத்தம் 1,111 மத்திய பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதில் குறிப்பாகத் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கு 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல்துறை பார்வையாளர்கள் மற்றும் 151 செலவினப் பார்வையாளர்கள் (Expenditure Observers) எனப் பெரும் பட்டாளமே களமிறக்கப்பட உள்ளது; கடந்த 2021 தேர்தலை விட இம்முறை செலவினப் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பது, தேர்தல் கெடுபிடிகள் மற்றும் பணப்பட்டுவாடா கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளதைக் காட்டுகிறது. நியமிக்கப்பட்ட அனைத்துப் பார்வையாளர்களும் மார்ச் 18-க்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றும், அங்குச் சென்றவுடன் பொதுமக்களின் குறைகளைக் கேட்கத் தங்களின் தொடர்பு விவரங்களை வெளியிட்டு, தினசரி குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது