Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு

128

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு, சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போய் மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணியின் கண்டனப் போராட்டத்தில் பேசிய அவர், தமிழகம் போதைப் பொருட்களின் சந்தையாக மாறிவிட்டதாகவும், அரங்கேறும் பல சட்டவிரோதச் செயல்களின் பின்னணியில் திமுகவினரின் பெயர்கள் அடிபடுவதாகவும் சாடினார்; முதலமைச்சர் ஸ்டாலின் வசம் காவல்துறை இருந்தும், அதனைச் சரியாகக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக விமர்சித்த அவர், வரும் மே 4-ஆம் தேதி வரை அவர் பதவியில் இருந்தாலும், தமிழக மக்கள் ஒன்றிணைந்து விரைவில் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் எனத் தெரிவித்தார்.