Take a fresh look at your lifestyle.

தமிழ் தான் எனது அடையாளம்: பிரியங்கா சோப்ரா

12

தமிழ் தான் எனது அடையாளம்: பிரியங்கா சோப்ரா
விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து தெலுங்கு, இந்திபடங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். அதோடு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக வாரணாசி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது முதல் படம் மற்றும் முதல் ஹீரோ பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘சினிமாவில் எனது முதல்படி தமிழ் தான். என் சக நடிகர் விஜய் அப்போதே மிகவும் பிரபலமானவர். படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்க்கவும், அவருடைய நடத்தை பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் வருவார்கள். இதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. விஜய்யை சுற்றி இருக்கும் ரசிகர் கூட்டத்தை பார்த்த போது அவர் ஒரு கடவுளை போல தெரிந்தார்.